[X] Close

2.0 படம் பற்றி தமிழ் திரைப் பிரபலங்களின் கருத்து என்ன? ஒரு தொகுப்பு


twitter-celebrities-about-2-0

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 17:27 pm
  • அ+ அ-

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிகாலை முதலே படத்தின் காட்சிகள் திரையிடப்பட ஆரம்பித்துவிட்டன. படத்தின் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம், சண்டைக் காட்சிகள், ரஜினியின் நடிப்பு உள்ளிட்ட பல அம்சங்களைப் பாராட்டி நெட்டிசன்கள் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு பின் வருமாறு:

தனுஷ் - 2.0 அசலான படம். ஹாலிவுட்டுக்கு நிகரானது. பிரம்மிக்க வைத்துவிட்டது தலைவா. ஷங்கர் சார், நீங்கள் தமிழ்/இந்திய சினிமாவின் பெருமை. மயங்கிவிட்டேன். ஒட்டு மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். திரையரங்கைத் தவிர வேறெங்கும் இந்த அற்புத்தத்தைப் பார்க்கும் தவறை செய்துவிடாதீர்கள். அக்‌ஷய்குமார் சார், அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக வாழ்ந்துள்ளீர்கள். கடவுளின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மான்,  ஒளிப்பதிவில் மேதமை நிரவ் ஷா, கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் எனது இனிய நண்பர் ஏமி ஜாக்சன் என அனைவருக்கும் இந்த காவியப் படத்தில் பங்காற்றியதற்கு வணக்கங்கள். 

கார்த்திக் சுப்பராஜ் - 2.0. வெறித்தனம். தலைவா நீங்கள் பிரம்மிக்க வைத்துவீட்டீர்கள். திரையில் நீங்கள் வந்தால் தீப்பற்றுகிறது. ஷங்கர் சார், உங்கள் குழு ஒரு காவியப் படத்தைக் கொடுத்துள்ளது. இந்தியப் படங்களுக்கான தரத்தை உயர்த்தியுள்ளது. தலை வணங்குகிறேன். நாம் அனைவரும் கொண்டாட ஒரு படம் இங்கு வந்துவிட்ட்டது. 

அனிருத் - நம்ப முடியாத அனுபவம். அனைத்திந்திய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் மாற்றி எழுதப்படும். தலைவர் ரஜினிகாந்த், ஆசான் ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ், ஏமி ஜாக்ஸன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தலை வணங்குங்கள். படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க நினைக்கிறேன். 

கே.வி.ஆனந்த் - ஷங்கரின் சிறந்த படங்களில் ஒன்று. 2.30 மணி நேரம் நம்ப முடியாத ஒன்றை வைத்து நம்மை மயக்குகிறது. லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள். 

வெங்கட் பிரபு - நன்றி ஷங்கர் சார். என்ன ஒரு பார்வை. பிரம்மித்துவிட்டேன். என்னைப் போன்ற தலைவர் ரசிகர்களுக்கு 2.0 ஒரு விருந்து. கண்டிப்பாக 3டியில் பாருங்கள். 3.0வுக்கு காத்திருக்க முடியவில்லை. 

சிம்ரன் - 2.0வுக்கு வாழ்த்துகள். அற்புதமான படைப்பு. சமூக கருத்து + அட்டகாசமான கிராபிக்ஸ். ரஜினிகாந்த் சார் இது சிறப்பு. ஷங்கர் அவர்களுக்கு பெரிய வணக்கங்கள். அக்‌ஷய்குமாரும் இவர்களுடன் இணைந்து பொழுதுபோக்கான காட்சி விருந்தைத் தந்திருக்கிறார். முழுவதும் ரசித்தேன். எனது குழந்தைகளுடன் பார்த்தேன்.

சாந்தனு - 2.0 சங்கர் சாரின் வாயைப் பிளக்க வைக்கும் படைப்பு. ரஜினிகாந்த் முழுவதும் வெளிச்சத்தைத் திருடிக் கொள்கிறார். 2.0 கதாபாத்திரத்தில் தனது நடிப்பு மற்றும் வசனங்களால் திரையில் தெறிக்க விடுகிறார். லைகா நிறுவனம் சங்கர் சாரின் படைப்பாற்றல் திறனை ஆடம்பரமான படைப்பாக நமக்குத் தந்துள்ளது. 

சதீஷ் - 2.0 வேற லெவல் அனுபவம். வெவ்வேறு கதாபாத்திரங்கள் தலைவர் ரஜினிகாந்த் பிரம்மிக்க வைத்துவிட்டார். இது போன்ற ஒரு இந்தியப் படத்தை இதுவரைப் பார்க்கவில்லை. ஷங்கர் சாருக்கு வாழ்த்துகள். பறவை மனிதனாக அக்‌ஷய்குமார் அற்புதம். சிட்டியும், குட்டியும் இந்தியாவின் அவெஞ்சர்கள். 

பாலாஜி மோகன் - ஷங்கரின் அளவில்லா கற்பனையின் அற்புதம சினிமாவே 2.0. தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களின் தலைவர் என்றும். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close