‘நான் வயலன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


‘மெட்ரோ’ சிரிஷ் , பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்தகிருஷ்ணன் இயக்குகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 90-களில் நடக்கும் கதையான இது மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.