[X] Close

தமிழ் ரீமேக்கை உறுதிப்படுத்திய ‘பிங்க்’ படக்குழு


ajith-starring-pink-remake-confirmed

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 19:57 pm
  • அ+ அ-

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் ‘பிங்க்’ ரீமேக் என்பதை இந்தி திரையுலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

’விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தற்போது இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழுவினர் எதையுமே உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், ‘பிங்க்’ படத்தின் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சூஜித் சர்கார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

“ஆம், ‘பிங்க்’ தமிழில் உருவாகப் போகிறது. நான் அதை இயக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். படம் தயாரானதும் என்னிடம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  பிங்க் படத்தில் (இயக்குனர்) அனிருத்தாவின் பங்கு எவ்வளவு பிடித்ததோ, அதே அளவு தமிழில் பிங்க் படக்குழுவினர் அதில் செய்துள்ள மாற்றங்களையும் மதிக்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் - வினோத் - போனி கபூர் இணையவுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இதன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close