[X] Close

கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்த விஷால்; சிறந்த கிராமமாக மாற்றுவேன் என உறுதி!


delta-villege-vishal

நடிகர் விஷால்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 13:11 pm
  • அ+ அ-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றைத் தத்தெடுத்துக் கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்தார். அதன்படி கார்காவயல் எனும் கிராமத்தை தத்தெடுக்கிறார் விஷால்.

வறுமையில் வாடும் மக்களுக்கு அவர் அளித்து வரும் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால் பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்க்வயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால்.

இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாகவும் நன்றியுடனும்  இருப்போம் என்று கூறியுள்ளனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close