[X] Close

முரட்டு உருவம்; மழலை உள்ளம்; அம்பரீஷ் குறித்து கமல் நெகிழ்ச்சி


ambarish-kamal

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 12:46 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

முரட்டு உருவம். ஆனால் மழலை உள்ளம் கொண்டவர் அம்பரீஷ் என்று அவரின் மறைவு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கமல்.

கடந்த 1952-ம் ஆண்டு மே 29-ம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர், படிப்படியாக உயர்ந்து, ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அம்பரீஷ்.

இவருக்கு சிறுநீரகக் கோளாறு பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருந்த அம்பரீஷ், சிங்கப்பூர் சென்றும் சிகிச்சைகள் மேற்கொண்டார். நேற்று 24ம் தேதி திடீரென இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது மறைவை அடுத்து முதல்வர் குமாரசாமி, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் மறைவையொட்டி, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும், அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர் அம்பரீஷ். இவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் கலங்கிப் போனார். ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன் என்று ரஜினிகாந்த், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் அம்பரீஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.

42 வருடங்களாக என் நண்பர் அம்பரீஷ், முரட்டு உருவம். மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close