[X] Close

போன மாசம்தான் அவரோட சேர்ந்து படம் பாத்தேன்; - அம்பரீஷ் குறித்து சரத்குமார் உருக்கம்


ambarish-sarathkumar

அம்பரீஷுடன் சரத்குமார், ராதிகா

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 10:27 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

போன மாதம்தான் அம்பரீஷ் சாருடன் படம் பார்த்தேன் என்று நடிகர் அம்பரீஷின் மரணம் குறித்து உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

கடந்த 1952-ம் ஆண்டு மே 29-ம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர், படிப்படியாக உயர்ந்து, ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அம்பரீஷ்.

இவருக்கு சிறுநீரகக் கோளாறு பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருந்த அம்பரீஷ், சிங்கப்பூர் சென்றும் சிகிச்சைகள் மேற்கொண்டார். நேற்று 24ம் தேதி திடீரென இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது மறைவை அடுத்து முதல்வர் குமாரசாமி, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் மறைவையொட்டி, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும், அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர் அம்பரீஷ். இவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் கலங்கிப் போனார். ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன் என்று ரஜினிகாந்த், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சரத்குமார், ‘மிக அற்புதமான மனிதர் அம்பரீஷ். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. கடந்த மாதம்தான் அவருடன் சேர்ந்து சினிமா பார்த்தேன். அவரின் மறைவு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அம்பரீஷ் சாரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close