[X] Close

நல்ல நண்பனை இழந்துட்டேன்! - அம்பரீஷ் மறைவுக்கு ரஜினி இரங்கல்


ambarish-rajini

ரஜினி - அம்பரீஷ்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 09:27 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். இனிய நண்பனை இழந்துவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த், அம்பரீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

கன்னடத் திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான அம்பரீஷ், சிறுநீரகக் கோளாறால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று 24ம் தேதி இரவு காலமானார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் அம்பரீஷ். திரையுலகில் வில்லனாக நுழைந்து, கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்து, அரசியலிலும் கால்பதித்து, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவருக்கு வயது 66.

முரட்டுக்காளை, திசை மாறிய பறவைகள் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்த சுமலதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அம்பரீஷ்.

ரஜினியின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராகவும் திகழ்ந்தவர் அம்பரீஷ். இவரின் மறைவுச் செய்தி அறிந்த ரஜினி, ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். ஒரு இனிய நண்பரை இழந்து நிற்கிறேன். அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில், எழுத்தாளர் சுஜாதாவின் கதையை பஞ்சு அருணாசலம் ப்ரியா எனும் திரைப்படமாகத் தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்திருந்தனர். இதில் ஸ்ரீதேவியின் காதலானாக, சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கேரக்டர்களில் கணேஷாக ரஜினியும் வஸந்தாக அம்பரீஷூம் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close