[X] Close

தேவர்மகன் 2 தான் தலைப்பு என்று நான் சொல்லவே இல்லையே!- கமல்


thevarmagan-2-is-not-the-title-kamalhassan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Nov, 2018 12:42 pm
  • அ+ அ-

தேவர்மகன் 2 படத்தலைப்பு சர்ச்சை குறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவரும் திரைப்பட நடிகருமான கமல்ஹாசன், "தேவர்மகன் 2 தான் அந்தப் படத்தின் தலைப்பு என்று நான் சொல்லவே இல்லையே" எனக் கூறியிருக்கிறார்.

தேவர்மகன் 2 படம் உருவாகப்போவதாக கமல்ஹாசன் கூறியதிலிருந்து படத்தலைப்புக்கு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. குறிப்பாக புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவர்மகன் 2 என்று தலைப்பு வைத்தால் தென் மாவட்டங்களில் மீண்டும் சாதிக் கலவரம் வெடிக்கும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் " ராஜ்கமல் ஃபில்ம்ஸின் 12-படத்தை நான் ரீமேக் செய்கிறேன் என்று சொன்னால் யாருக்கும் புரியாது. அதனால் அந்த டைட்டிலை சொன்னேன். அதுதான் புது படத்தின் டைட்டில் என்று சொல்லவே இல்லை. இதை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த டைட்டிலை நான் வைக்கவே மாட்டேன்" என்றார்.

தேவந்திரர்மகன் 2 என்று பெயர் வைக்கலாம் என கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்திருக்கிறாரே அதை நீங்கள் பரிசீலிப்பீர்களா என்ற கேள்விக்கு "அவர் கோரிக்கைகள் வைத்துக் கொண்டேதான் இருப்பார். அவர் கதைக்கு அந்த தலைப்பு பொருந்தலாம்.

நம்ம கதைக்கு பொருந்தவேண்டும் அல்லவா? நான் அவரது கோரிக்கையை பரிசீலிக்கப்போவதில்லை. இந்த தலைப்பு சர்ச்சை மூலம் சண்டியர் பட சர்ச்சை போல் ஆக்க முயலலாம். ஆனால், இந்த பஸ்ஸில் அவருக்கு இடமில்லை" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close