[X] Close

ரஜினி நலமாக இருக்கிறார்; வதந்திகளை நம்பாதீர்கள்


rajini

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:26 pm
  • அ+ அ-

ரஜினி நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்பவேண்டாம் என்று ரஜினியின் செய்தி மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்கடந்த வார்ம் பிரஸ்மீட் வைத்தார். முதல்நாளும் அடுத்தநாளுமாக உற்சாகத்துடன் தனக்கே உரிய பாணியில் பேசினார்.

இதையடுத்து, கடந்த 15ம் தேதி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் உலுக்கிப் போட்டது. 16ம் தேதி கஜா புயலின் அட்டூழியம், வெளியே தெரியவந்தது. இதன் பிறகு, டெல்டா மாவட்ட மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ உதவிக்கரங்கள் நீண்டன.

நடிகர் சூர்யா தன் குடும்பத்தின் சார்பாக 50 லட்சம் ரூபாய் அறிவித்தார். அடுத்து விஜய் சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவியை அறிவித்தார். சிவகார்த்திகேயன் 20 லட்சத்துக்கான நிவாரண உதவியை அறிவித்தார்.

நடிகர் விஜய் 40 லட்சத்துக்கான நிவாரண உதவித் தொகையை அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த், 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள், தன்னுடைய ரஜினி மக்கள் மன்றம் மூலமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் வருகிற 28ம் தேதி ரிலீசாகிற ஷங்கர் – ரஜினி இணைந்து கலக்கும் 2.0 படம் ரிலீசாகிறது. இந்தப் படத்துக்கு ரசிகர் மன்ற ஷோ குறித்தும் டிக்கெட் விலை குறித்தும் தன் ரசிகர்களுக்கு கண்டிப்புக் காட்டி அறிக்கையும் வெளியிட்டிருந்தார் ரஜினி.

இந்த நிலையில், இன்று (23ம் தேதி) மதியத்துக்கு மேல் ரஜினியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதையடுத்து ரஜினியின் ரசிகர்களும் தமிழக மக்களும் கவலையானார்கள். பதட்டமாக பேசிக்கொண்டார்கள்.

இந்த நிலையில், ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் உடல்நலம் நன்றாகவே இருக்கிறது. ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்று ரஜினியின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் இருந்து விளக்கப்பட்டது.

அதேபோல் ரஜினி மக்கள் மன்றமும், ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close