சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படம் இப்போதுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அற்புதமான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தைப் பார்த்தேன். மனதைத் தொடும் விதமாகவும் நகைச்சுவையாகவும் இருந்த இந்தப் படம், ஆரம்பம் முதல் இறுதிவரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது.
அபிஷன் ஜீவிந்த் அற்புதமாக எழுதி இயக்கி இருக்கிறார். சிறந்த சினிமா அனுபவத்துக்கு நன்றி. இந்தப் படத்தைத் தவறவிட வேண்டாம்" என்று கூறியுள்ளார். இதற்கு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.