மே இறுதியில் தொடங்குகிறது ‘சூர்யா 46’ பட ஷூட்டிங்


ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார், சூர்யா. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர் தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர். சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. சூர்யாவின் 46-வது படமான இதன்தொடக்க விழா, ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ரவீனா டாண்டன், ராதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

x