தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பே தனது திருமணம் நடக்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நடிகை சாய் தன்காவைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
சாய் தன்ஷிகா, ‘பேராண்மை’, ‘பரதேசி’, ‘இருட்டு’, ‘அரவான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இரு
வரும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில், திருநங்கைகளுக்காக அழகி போட்டி விழுப்புரத்தில் நடந்தது. அந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற நடிகர் விஷால் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் சாய் தன்ஷிகா. இந்நிலையில் இருவரும் ஆகஸ்ட் 29 - ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.
சாய் தன்ஷிகா தயாரித்து நடித்துள்ள ‘யோகிடா’ என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது இந்த தகவலை நடிகை சாய் தன்ஷிகா மேடையில் அறிவித்தார். இதையடுத்து படக்குழுவினர் மேடையில் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.