ராம் இயக்கத்தில் நடிகர் சிவா ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் என பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீல் குட் படமான இது பல உணர்வுப்பூர்வமான தருணங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கும் என்கிறது படக்குழு.
இந்தப் படம் ஜூலை 4-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வழங்குகிறார்.