திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி முடிந்த நிலையில் இயக்குநர் வி்க்னேஷ் சிவன் நேற்று காலை 5 மணியளவில் சுவாமி தரிசனத்துக்காக வருகை தந்தார். முன்னதாக, சம்மந்த கணேசர் சன்னதி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை அவர் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் விக்னேஷ் சிவனுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.