பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸின் பென்ஸ்!


‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் அடுத்து இயக்கும் படம், ‘பென்ஸ்’. இதன் கதையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இரு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், ஜெகதீஷ் பழனிசாமியின் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளிலும் 120 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது.

x