இந்தியில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’


சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம், ‘பரியேறும் பெருமாள்’. 2018-ல் வெளியான இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘தடக் 2’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் நவ.22-ல் தேதி வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. படத்தை ஷாஸியா இக்பா இயக்குகிறார். இதில் நடிக்கும் திரிப்தி திம்ரி, ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.