தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு ஹீரோ ராஜ் தருண்


தெலுங்கில், உய்யாலா ஜம்பாலா, குமாரி 21 எஃப், பவர் பிளே உள்பட பல படங்களில் நடித்திருக்கும் ராஜ் தருண், தமிழில் ‘பலூன்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அவர் இப்போது தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை விஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படம் பற்றி விஜய் மில்டன் கூறும்போது, “ எனக்கு மிக நெருக்கமான படம் இது. இது சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது. ராஜ் தருண் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார். அவருக்குத் தமிழில் இது சிறந்தஅறிமுகமாக இருக்கும். தமிழ், தெலுங்கு பார்வையாளர்களை இணைக்கும் முயற்சியாகவும் இந்தப் படம் இருக்கும். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

x