விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘எல்ஐகே-லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கும் இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, கவுரி கிஷண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை, ரவுடி பிக்சர்ஸ், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, செப். 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘டிராகன்’ வெற்றிக்குப் பின் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு உள்ளது.