புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி மரணம்


தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தவர் ‘சூப்பர்குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார்.

வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். ‘பரமன்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு திரையுலகினர் பலர் பண உதவி செய்துவந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த சூப்பர்குட் சுப்பிரமணிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

x