ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஃபேன்டஸி திரில்லர் படம், ‘இம்மார்டல்’. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் இந்தப் படத்தில் ‘டிராகன்’ கயாது லோஹர் நாயகியாக நடிக்கிறார்.
ஏகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
இளைஞன் ஒருவன் வாழ்வில் திடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. ஃபேன்டஸி படம் என்பதால், கிராபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அதிக அளவில் இடம் பெறுகிறது. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதன் முதல் தோற்றத்தை விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.