பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜு


சென்னை: ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை மமிதா பைஜுவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படத்தில் அவர் ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘எல்ஐசி’, அஸ்வத் மாரிமுத்துவின் ‘டிராகன்’ படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், அடுத்து கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் அவர் ஜோடியாக மமிதா பைஜு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.