சென்னை: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி இன்று காலமானார்.
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 10:30 மணி அளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணி தனது மனைவியான சாந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.