கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பதிலால் நடிகர் சிம்பு பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியிடம், “உங்களுக்கு பிடித்த பாடல் எது?” என்று கேட்டதற்கு “நீ சிங்கம் தான்” என்ற பாடலை அடிக்கடி கேட்பதாக குறிப்பிட்டார். இப்பாடல் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றதாகும். விராட் கோலியின் இந்தப் பதிலை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
விராட் கோலி பதிலளித்த வீடியோ பதிவினை மேற்கொளிட்டு சிம்பு “நீ சிங்கம் தான் விராட் கோலி” என்று தெரிவித்தார். மேலும் இயக்குநர் கிருஷ்ணா, “வணக்கம் விராட் கோலி சார். நான் உங்களின் தீவிர ரசிகன். என்னுடைய ‘பத்து தல’ படத்தில் வரும் ‘நீ சிங்கம் தான்’ பாடல் உங்களுக்குப் பிடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். மிக்க நன்றி. கண்டிப்பாக இது ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் மேஜிக் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Nee singam dhan @imVkohli https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
Hi @imVkohli, as a hardcore fan of yours, hearing that you liked a song #NeeSingamDhan from my film #PathuThala truly means the world to me. Thank you so much—it’s an honor! The magic, of course, is all @arrahman sir@SilambarasanTR_ @RCBTweets https://t.co/Ea7SYMBzdU