[X] Close

ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - இறால் பிரியாணி


iraal-kulambu

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:32 pm
  • அ+ அ-

என்னென்ன தேவை?

இறால் - 1 கிலோ

பாசுமதி அரிசி - 1 கிலோ

வெங்காயம் - 10

தக்காளி - 6

புதினா, கொத்தமல்லி -  தலா 1 கட்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - பூண்டு விழுது  - 4 டீஸ்பூன்

பட்டை , லவங்கம் - 4

சோம்பு - 1 டீஸ்பூன்

நட்சத்திர சோம்பு - 2

ஏலக்காய் - 3

பிரியாணி இலை - 4

கசகசா - 1 டீஸ்பூன்

தயிர் - 1 கப்

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியைக் கழுவி, ஊறவையுங்கள். புதினா, தக்காளி, இஞ்சி - பூண்டு, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், தயிர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரையுங்கள்.

வாயகண்ட பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்குங்கள். சுத்தம்செய்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து வதக்கி, கீறிய பச்சை மிளகாயைச் சேருங்கள். அரைத்த விழுதைச் சேர்த்து  ஒரு கொதி வந்தவுடன் அரிசிக்கு ஏற்ற அளவு தண்ணீரை அளந்து ஊற்றுங்கள்.

தண்ணீர் கொதித்ததும் சிறிது கேசரி கலர் சேர்த்து, அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி மூடிவிடுங்கள். அரிசி பாதியளவு வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, அதன் மேல் சூடான தோசைக்கல்லை வைத்து அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து தம் போடுங்கள். சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து மல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close