[X] Close

ஈடு இணையில்லா கிறிஸ்துமஸ் விருந்து! - போட்டி (குடல்) கூட்டு


iraal-kootu

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 18:27 pm
  • அ+ அ-

என்னென்ன தேவை?

ஆட்டுக் குடல் - 1

கடலைப் பருப்பு – 1 கப்

வெங்காயம் - 4

தக்காளி - 3

இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு

பூண்டுப் பல் - 10

மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கத்திரிக்காய் (விரும்பினால்) - 1

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பில்லை,

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுத்தம்செய்த குடலுடன்  கடலைப் பருப்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்  ஊற்றி குக்கரில் 8 முதல் 10 விசில் வரை விட்டு எடுங்கள். பிறகு பூண்டுப் பல், கத்தரிக்காய் துண்டுகள் (விரும்பினால்) சேருங்கள். தாளிக்கும் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு , சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பில்லை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துக் கலவையில் கொட்டுங்கள். மிளகாய் நெடி போகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close