[X] Close

ரூ. 35,000 கோடி கடனை திருப்பி செலுத்தியுள்ளோம்: ஆர்-காம் தலைவர் அனில் அம்பானி தகவல்


35-000

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:45 am
  • அ+ அ-

கடந்த 14 மாதங்களில் தங்கள் நிறுவனம் ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பொறுப்புகளை திரும்ப செலுத்தியுள்ளதாக ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.

தங்கள் நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக அவர் இத்தகவலை வெளியிட்டார்.

2018 ஏப்ரல் 1 முதல் மே 31, 2019 வரையான காலத்தில் தங் கள் நிறுவனம் ரூ. 24,800 கோடி அசலையும், ரூ. 10,600 கோடி வட்டி யையும் கட்டியதாக அவர் தெரிவித்தார். வங்கிகள், நிதி நிறு வனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு கடன் வழங்க மறுத்துவிட்ட நிலை யில் மிகவும் சவலான சூழலிலும் நிறுவனத்துக்குள்ள கடன் பொறுப் புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ரிலையன்ஸ் குழும நிறுவனங் கள் மீது கடந்த சில வாரங்களாக தேவையற்ற வதந்திகள், யூகங்கள் ஆகியன பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பங்குதாரர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி னார்.

ரிலையன்ஸ் கேபிடல், ரிலை யன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன் ஃபிரா ஆகிய நிறுவனங்கள் பெற்ற கடன் தொகைகள் திரும்ப செலுத் தப்பட்டது. இதேபோல எதிர்காலத் தில் நிறுவனம் அளிக்க வேண்டிய கடன் பொறுப்புகள் அனைத்தை யும் நிறுவனம் நிச்சயம் நிறை வேற்றும் என்றார்.

ஒழுங்குமுறை ஆணையங்கள், நீதிமன்றங்களால் சில பிரச்சினகள் உருவானது என்று குற்றம் சாட்டிய அவர், நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 30 ஆயிரம் கோடியை தாமதமான தீர்ப்பு காரணமாக காலம் கடந்து கிடைத்தது என்றார்.

அவருடைய நிறுவனத்துக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 30 ஆயிரம் கோடி ஏறக்குறைய 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close