[X] Close

வாராக் கடன்: வழிகாட்டுதலை வெளியிட்டது ஆர்பிஐ


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:29 am
  • அ+ அ-

மும்பைவாராக் கடன்களை மீட்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் வாராக்கடன்களாகும் நிலையிலுள்ள கணக்குகளை 30 நாட்களுக்குள் வங்கிகள் அடையாளம் காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாராக்கடன் தொடர்பாக வங்கிகளுக்கு 2018 பிப்ரவரி 12-ல் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையை கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து புதிய வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வாராக் கடன்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் 30 நாட்களுக்குள் அடையாளம் காண வேண்டும்.

மேலும் அந்த 30 நாட்களுக்குள் வாராக்கடன் மீட்புக்கான திட்டங்களையும் தயாரித்துக்கொள்ள வேண்டும். 2018 பிப்ரவரி 12 சுற்றறிக்கையில் 180 நாட்கள் தாண்டி ஒரு நாள் ஆனாலும் அவற்றை வாராக்கடனாக பாவித்து நடவடிக்கையை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close