[X] Close

பிரதமர் மோடி பதவியேற்புக்குப்பின் பங்குச்சந்தைகள் உச்சம்: சென்செக்ஸ் 40,000; நிப்டி; 12,000


40-000-12-000

  • kamadenu
  • Posted: 31 May, 2019 10:34 am
  • அ+ அ-

பிரதமராக மோடி 2-ம் முறையாக பதவியேற்றுள்ள நிலையில் பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் ஏற்றம் கண்டன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி 2-வது முறையாக நேற்று பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடி 2-ம் முறையாக பொறுப்பபேற்றுள்ளதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று மீண்டு்ம 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. சென்செக்ஸ் இன்று காலைநேர வர்த்தகத்தில், 300 புள்ளிகள் உயர்ந்து 40,119 புள்ளிகளை தொட்டது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் உயர்ந்து காணப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும்12 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டி, 81 புள்ளிகள் உயர்ந்து 12,027 புள்ளிகளாக அதிகரித்தது.

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக மே 20-ம் தேதி பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23-ம் தேதியும் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.      

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close