[X] Close

பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது


40

  • kamadenu
  • Posted: 23 May, 2019 11:09 am
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது.   

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தெரிவித்தன. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்றம் கண்டது.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெரும் சூழல் உள்ளது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகளில் மீண்டும் உச்ச ஏற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. பின்னர், 39,901 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

இதுபோலவே, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 12 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close