[X] Close

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: இந்தியாவுக்கு சாதகமாகும் ஏற்றுமதி வாய்ப்புகள்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:44 am
  • அ+ அ-

அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு சாதகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதை இந்தியா சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி தெரிவித்துள்ளார். இவர் வெளிநாட்டு வர்த்தக கல்விமையத்தின் (ஐஐஎஃப்டி) பேராசிரியராக உள்ளார். ஆயத்த ஆடை, விவசாயம், ஆட்டோமொபைல், இயந்திர உதிரி பாகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்புகள் நிலவுகின்றன.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இயந்திர பாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மீது அமெரிக்கா வரிவிதித்துள்ளது. இத்தகைய பொருட்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யலாம்.

அதேபோல அமெரிக்காவிலிருந்து ஆட்டோமோடிவ் உதிரிபாகங்களை சீனா பெருமளவு எதிர்பார்க்கிறது. அதேபோல விவசாயத்தில் சோயா பீன்ஸையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்தவாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்க முடியும். ஆயத்த ஆடையைப் பொறுத்தமட்டில் சீனாவுக்கு அடுத்தபடியாக அனைத்து வளங்களையும் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்குத் தேவையான ஆடைகளை இங்கிருந்து தயாரித்து அளிக்க முடியும் என்று ஜோஷி சுட்டிக்காட்டினார்.

தகவல் தொழில்நுட்பம் (ஐசிடி)மற்றும் ஆட்டோமோடிவ் துறையிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்துறை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமடைந்துள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close