[X] Close

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி


1-13

  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:43 am
  • அ+ அ-

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் மிக அதிகபட்சமாக ரூ.1.13 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்தே ஜிஎஸ்டி வருமானம் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் ரூ.1.06 லட்சம் கோடி வசூலானது. ஏப்ரல் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1,13,865 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி ரூ.21,163 கோடி. எஸ்ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.54,733 கோடி, செஸ் ரூ.9,168 கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஆர் ரிட்டர்ன் 3 பி படிவம் மார்ச் மாதத்துக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை தாக்கல் செய்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72.13 லட்சமாகும். மத்திய அரசு ரூ.20,370 கோடியை சிஜிஎஸ்டி செட்டில் செய்துள்ளது. எஸ்ஜிஎஸ்டி தொகையாக ரூ.15,975 கோடியும், ஐஜிஎஸ்டியாக ரூ.12,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close