[X] Close

டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ. 134 கோடி


134

  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:47 am
  • அ+ அ-

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 133.80 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 19.2 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டு மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 165.60 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 4,007 கோடியிலிருந்து ரூ. 4,384 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ விற்பனை மற்றும் ஏற்றுமதி 9.07 லட்சமாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் விற்பனை 8.89 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆண்டு முழுவதிலும் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.670.10 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 1.13 சதவீதம் அதிகமாகும். முந்தைய நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.662 கோடியாக இருந்தது.

முந்தைய நிதி ஆண்டு வருமானம் ரூ. 18,209 கோடியாகும். கடந்த ஓராண்டில் 37.57 லட்சம் வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. -பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close