[X] Close

தமிழ் சினிமா 2013 : எதிர்நீச்சலால் சங்கத் தலைவரான சிவகார்த்திகேயன்


2013

  • Posted: 31 Dec, 2013 17:39 pm
  • அ+ அ-

இந்தியப் பங்குச் சந்தை 2018-19 நிதி ஆண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளின் பங்குச் சந்தைகளை விடவும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் சந்தித்தது. ஆனாலும், அவற்றையெல்லாம் மீறி குறிப்பிடத்தக்க சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது தெரியவந்துள்ளது. வளர்ந்த முன்னணி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் பங்குச் சந்தைகளை விடவும், அதேசமயம் வளரும் நாடுகளான சீனா, பிரேசில் நாடுகளின் பங்குச் சந்தைகளை விடவும் இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 17.3 சதவீத வளர்ச்சியையும், தேசியப் பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 14.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. ஆனால், அமெரிக்கப் பங்குச் சந்தை 7.6 சதவீதமும், இங்கிலாந்து பங்குச் சந்தை 3.2 சதவீதமும், பிரேசில் 11.8 சதவீதமும் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளன. சீனா (-2.5%), ஜப்பான் (-1.2%), தென் கொரியா (-12.5%) மற்றும் ஹாங்காங் (-3.5%) ஆகியவை நெகட்டிவ் வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன. இதன் மூலம் சர்வதேச பங்குச் சந்தைகளுக்கிடையில் சிறப்பான வளர்ச்சியை இந்தியப் பங்குச் சந்தைகள் அடைந்திருப்பது தெரிகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த நிதி ஆண்டில் 6 சதவீதம் உயர்ந்து ரூ. 151 லட்சம் கோடியாக உள்ளது. உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு பங்குச் சந்தையில் உள்நாட்டினர் செய்யும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 11.4 சதவீதம் உயர்ந்து ரூ.24 லட்சம் கோடியாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 8.6 சதவீதம் உயர்ந்து ரூ.30 லட்சம் கோடியாகவும் உள்ளது. 2018-19 நிதி ஆண்டு பங்குச் சந்தைகளுக்கு மிகுந்த சவாலான ஆண்டாகவே அமைந்தது. ஆனால், அத்தகைய நெருக்கடிகளிலும் இந்தியச் சந்தைகள் சிறப்பாக செயலாற்றியுள்ளன. அதற்கு உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்தது மிக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close