[X] Close

தீர்வைத் தேடும் சரியான அணுகுமுறை


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:12 am
  • அ+ அ-

THEORY OF CONSTRAINTS என்ற “கட்டுத்தளை கோட்பாட்டை” தொழில் உலகுக்கு அறிமுகம் செய்த எலியாஹூ கோல்ட்ராட் எழுதிய THE GOAL “கோல்“ தொழிற்சாலைகளில் உள்ள நடைமுறைகளில் இருக்கும் பிரச்சினைகளை விவரித்தது. அதன் அடிப்படையில், இன்றைய இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீடித்திருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையை ‘APPARENT IN HINDSIGHT’ என்ற ஒரு பிசினஸ் நாவல் மூலமாக வெக்டர் கன்சல்டிங் நிறுவனம் அலசி சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறது.

பாரம்பரிய நிர்வாக அணுகுமுறைக்கும் தற்போதுள்ள சிஸ்டம் சார்ந்த அணுகுமுறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் மிகப்பெரிய தொழில்களிலும், உள்நாட்டு நிர்வாக அமைப்பை பொறுத்துதான் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிற்சாலையின் ஒவ்வொரு துறையும் அதில் உள்ள பிரச்சினைகளை தங்களது கண்ணோட்டத்திலேயே அணுகுகின்றனர். உதாரணத்துக்கு, விநியோகத் துறையில் ஒரு பிரச்சினை என்றால், அந்தத் துறையின் அதிகாரி, அந்தத் துறைக்குள்ளாகவே அதை விவாதித்து தீர்க்க நினைப்பார். இதேபோல்தான் உற்பத்தித் துறையிலும் மற்றும் பிற துறைகளிலும் நடக்கிறது. ஆனால், ஒரு பிரச்சினையின் தீர்வு என்பது அந்தத் துறை மட்டுமல்லாமல், பிற துறைகளையும் சார்ந்து இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஒரு துறையில் காணப்படும் ஒரு பிரச்சினையைத் தீர்த்துவிட்டுப் பார்த்தால், வேறு ஒரு துறையில் புதிதாக இன்னொரு பிரச்சினை உருவாகிஇருக்கும். தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக, ஒரு கட்டத்தில் அந்தப் புதிய பிரச்சினை வந்து சேரும். CENTRALISATION அதிகாரத்தை மையப்படுத்தல் என்பதிலிருந்து, DE CENTRALISATION பன்முகப் படுத்துதலுக்கு மாறுவதும், தனிப்பட்ட CUSTOMISATION தயாரிப்பிலிருந்து STANDARDISATION தரப்படுத்தலுக்கு மாறுவதும், சப்ளையர்களைக் குறைப்பதும் பின்னர் கூட்டுவதும் என அனைத்து நடவடிக்கைகளும் தொழிற்சாலை மற்றும் நிர்வாக சூழ்நிலைக்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கின்றன.

இந்த புத்தகத்தில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள பிரதானமான பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதை எப்படி systematic approach மூலம் நிர்வாகம் கையாளுகிறது என்பதை மிக சுவாரஸ்யமான முறையில் பிசினஸ் நாவலாக தந்திருக்கிறார்கள். வாகனங்களுக்கு பொருத்தப்படும் உதிரி பாகங்களை தயாரிக்கும் HIGH GEAR ஹை கியர் எனப்படும் நிறுவனத்தின் கதை தான் இது.

ஹை கியர், OEM வாகன தயாரிப்பாளர்களுக்கு உதிரிபாகங்களை வழங்கிவருகின்றன. பின்னர், OEM நிறுவனங்கள் முழுமையாகத் தயார் செய்யப்பட்ட வாகனமாக தனிப்பட்ட வாடிக்கையாளருக்கு விற்று வருகின்றன.

இந்த விற்பனை சங்கிலியில் டயர் 1 (TIER 1) என்று சொல்லப்படும் ஆட்டோமொபைல் உதிரிபாக சப்ளையருக்கு - மாசக் கடைசியில் மட்டுமே டிஸ்பாட்சும் வியாபாரமும் ஆகும். அதேபோல் மாதத்தின் முதல் வாரத்தில்

உற்பத்தி மந்தமாகவே இருக்கும்.

OEM நிறுவனங்கள் திடீரென வழக்கமாக கொடுத்துக்கொண்டிருக்கும் பொருளுக்கான ஷெட்யூலை நிறுத்திவிட்டு, வேறு ஒரு பொருளுக்கான ஷெட்யூலை கொடுக்கும். அப்போது, வழக்கமாக அசெம்பிள் செய்யப்படும் உதிரி பாகங்கள் இருப்பில் இருக்கும், புதியதாக தேவைப்

படும் அசெம்பிளிக்கான உதிரிபாகங்களை தொழிற்சாலைக்கு உள்ளே தேடுவது என்பது - நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதைதான். இதுபோன்ற தொன்றுதொட்ட  பிரச்சினைகளையெல்லாம் அக்குவேறாக ஆணிவேறாக அலசுகிறது இந்த நாவல்.

மேலும், OEM வியாபாரத்துக்கும் ரீபிளேஸ்மென்ட்- மாற்றுச் சந்தை உதிரிபாக வியாபாரத்துக்கும் உள்ள வேறுபாடுகளையும், புரொடக்க்ஷன், ஃபைனான்ஸ், சேல்ஸ், இன்ஜினியரிங் என ஒரு தொழிற்சாலையின் பல்வேறு துறைகளில் நடக்கும் சலசலப்புகளையும், அதை உதிரிபாக நிறுவனங்கள் எப்படி கையாளுகின்றன, யாருக்கு முக்கியத்துவம் தருகின்றன, என்பதை எலியாஹூ கோல்ட்ராட்டின் TOC கட்டுத்தளை கோட்பாட்டின் அடிப்படையில், பிரச்சினைகளை அலசி டயர் 1 தொழிற்சாலை மட்டுமல்லாமல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தொழிற்சாலைகளில் நடைபெறும் அன்றாட நிர்வாகப் பிரச்சினைகளையும் சரியான முறையில் அணுகும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்தப் புத்தகம் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், தொழில் மேலாண்மை படிக்கும் மாணவர்

களுக்கும் முக்கியமான புத்தகம் என்று சொல்லலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close