[X] Close

மும்பை பட்டதாரிக்கு லண்டன் கூகுளில் வேலை: ஆண்டு சம்பளம் ரூ.1.20 கோடி


1-20

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 07:53 am
  • அ+ அ-

மும்பையைச் சேர்ந்த 21 வயது பொறியியல் பட்டம் பெறப் போகும் இளைஞருக்கு கூகுள் நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ஆண்டு சம்பளம் ரூ.1.20 கோடி என்ற அளவில் ஊதிய சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்துல்லா கான் என்ற இளைஞர் தற்போது ஸ்ரீ எல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் ஐஐடி-யில் மேற்படிப்புக்காக நுழைவுத் தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இன்று ஐஐடி-யில் படித்த மாணவர்களே பொறாமைப்படும் அளவு ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் இவருக்கு வேலை கிடைத்துள்ளது.

ஐஐடி அல்லாத பிற பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு ஆண்டு சம்பளமே அதிகபட்சம் ரூ. 4 லட்சம் வரைதான் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அப்துல்லா கானுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகும். போட்டி வாய்ப்புகளில் உள்ள சவால்கள் குறித்து இணையதளத்தில் கானின் புரொபைலை பார்த்து கூகுள் நிறுவனம் இவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியது. பல கட்ட தேர்வுகளை அடுத்து இவர் தேர்வு செய்யப்பட்டதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இவருக்கு அடிப்படை சம்பளம் ரூ. 54.40 லட்சமாகும். 15 சதவீத போனஸ் மற்றும் பங்குகள் ரூ.58.90 லட்சம் மதிப்புக்கு நான்கு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு செப்டம்பரில் இவர் கூகுள் நிறுவனத்தில் சேர உள்ளார். குறிப்பிட்ட இணையதள வடிவமைப்புக்கான புரோகிராமரை கூகுள் நிறுவனம் தேடி ஆராயும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கான் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வாய்ப்பு தான் எதிர்பார்க்காதது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோடிங் எழுதுவதில் நிபுணத்துவம் பெற்ற கான், பிளஸ் 2 வரை துபாயில் படித்தவர். பொறியியல் படிப்புக்காக மும்பைக்கு வந்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close