[X] Close

சென்செக்ஸ் 356 புள்ளிகள் சரிவு


356

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:59 am
  • அ+ அ-

மீண்டும் பொருளாதார தேக்க நிலை உருவாகும் என எழுந்த அச்சம் காரணமாக வாரத்தின் முதல் நாளான திங்களன்று பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் கடுமையாக குறைந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை 497 புள்ளிகள் வரை சரிந்தது. இந்நிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டதால் வர்த்தகம் முடிவில் 356 புள்ளிகள் சரிவடைந்து 37,809 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்சி) 103 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 11,354 புள்ளிகளானது. வேதாந்தா கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்நிறுவனப் பங்கு 3.28 சதவீதம் சரிந்தது. டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவன பங்குகளும் சரிந்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close