[X] Close

அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:59 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடும் முன்பாக நிதி அமைச்ச ருடனான இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட விவரங்களை நிதி அமைச்சரிடம் சக்தி காந்த தாஸ் விளக்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதிக் கொள்கை குறித்த முடி வெடுக்கும் 6 பேர் அடங்கிய குழு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியாக உள்ளது.

நிதிக் கொள்கை வெளியா வதற்கு முன்பாக மத்திய நிதி அமைச்சருடனான சந்திப்பு வழக்க மான ஒன்று என்று செய்தியாளர் களிடம் தாஸ் தெரிவித்தார்.

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஆர்பிஐ நிதிக் கொள்கை வெளி யாவதால் இது மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது.

பிப்ரவரி மாதம் வெளியான நிதிக் கொள்கையில் 18 மாதங்களுக்குப் பிறகு வட்டிக்குறைப்பு (0.25 சதவீ தம் குறைக்கப்பட்டது) நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததும் வட்டிக் குறைப்புக்கு முக்கியக் காரண மாக கூறப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் சில்லரை பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது.

அதேசமயம் தொழில்துறை வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந் தது. ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுத்தபோதிலும் வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்து அதன் பலனை வாடிக்கையாளர் களுக்கு அளிக்கவில்லை என்ற புகாரும் பரவலாகக் கூறப்படுகிறது.

வங்கியாளர்களுடன் ஆலோசனை

வங்கித் துறையில் நிலவும் பிரச்சினைகளை நேரில் கேட்ட றிய பொதுத்துறை வங்கித் தலைவர் களை இந்த வாரம் சந்திக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித் தார்.

பொதுத்துறை வங்கித் தலை வர்கள், கூட்டுறவு வங்கிகள், வங்கி யல்லாத நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார். இம்முறை பேமென்ட் வங்கிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close