[X] Close

காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 09:03 am
  • அ+ அ-

மாநில அரசுகளின் மின் விநியோக நிறுவனங்கள் 12 மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராததால் அவற்றின் ரூ.3 லட்சம் கோடி முதலீடு வீணாவதோடு, வாராக்கடனுக்கு ஆளாகும் அளவுக்கான நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் அதானி, ஜிஎம்ஆர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

2018 டிசம்பர் நிலவரப்படி மாநிலஅரசுகளின் மின் விநியோக நிறுவனங்கள், அதானி குழுமம், ஜிஎம்ஆர் குழுமம் மற்றும் என்டிபிசிஉள்ளிட்ட 12 மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.41,730 கோடியாக உள்ளது. இதில் அதானி குழுமத்துக்கு ரூ. 7,433.47 கோடியும், ஜிஎம்ஆர் குழுமத்துக்கு ரூ. 1,788.18 கோடியும், அரசுக்குச் சொந்தமான என்டிபிசி-க்கு ரூ. 17,187 கோடியும் நிலுவையாக உள்ளன.

இதில் அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசு ரூ.6,497 கோடியும், மகாராஷ்ட்ரா அரசு ரூ.6,179 கோடியும் நிலுவை வைத்துள்ளன. பணத்தை தர உத்தரப் பிரதேச அரசு 544 நாட்களும், மகாராஷ்ட்ரா அரசு 580நாட்களும் அவகாசம் எடுத்துக்கொள்கின்றன. இவை தவிர, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பணம் தராமல் உள்ளன. சராசரியாக இவை 562 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்கின்றன. இதனால், மின் உற்பத்தி நிறுவனங்களின் ரூ.3 லட்சம் கோடி முதலீடு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தி மூலம் வருமானம் வரவில்லையெனில், கைவசம் செயல்பாட்டு மூலதனம் சிறிது காலத்திலேயே காலியாகும் நிலை உள்ளது. எனவே இந்த நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி வாராக்கடன் சுமையை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close