[X] Close

லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைகிறது இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:21 am
  • அ+ அ-

ராம் மனோகர் லோகியா வழி வந்தவர்கள் என கூறிக்கொள்ளும் சில மாநில கட்சித் தலைவர்கள், அவரது கொள்கைகளை மறந்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

பொதுவுடைமை சித்தாந்தவாதியான ராம் மனோகர் லோகியாவின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வலைப்பூவில் கூறியிருப்பதாவது:

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள் நம்மை ஊக்குவிப்பதாக உள்ளன. வேளாண் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் லோகியா வலியுறுத்தினார். அவருடைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், பிரதமரின் விவசாயிகள் நல நிதி, நீர் மேலாண்மை, மண் சுகாதார அட்டை உள்ளிட்ட திட்டங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் ஆண், பெண்களிடையே பாகுபாடு இருக்கக் கூடாது என லோகியா விரும்பினார். இதன்படி, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. லோகியா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசின் செயல்பாட்டைப் பார்த்து பெருமை அடைந்திருப்பார்.

ஆனால், லோகியாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் சில மாநில கட்சித் தலைவர்கள், நேர்மையின்றி பாஜக அரசை குறை கூறி வருகின்றனர். முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றனர்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை, தொழில், ராணுவம் உள்ளிட்ட எந்தத் துறையும் முன்னேற்றம் அடையவில்லை என லோகியா ஒரு முறை குற்றம்சாட்டினார். அப்போதெல்லாம் லோகியா பேசினாலே காங்கிரஸ் கட்சிக்கு நடுக்கம் ஏற்படும் நிலை இருந்தது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை லோகியா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவருடைய வழி வந்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் இன்று அதே காங்கிரஸ் கட்சியுடன் வாக்கு வங்கிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

இது லோகியாவின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளது. இதன்மூலம் லோகியாவை அவர்கள் அவமதித்துள்ளனர். வாரசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது என லோகியா கருதினார். ஆனால், அவர் வழி வந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட தங்கள் குடும்பத்தினருக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதை லோகியா பார்த்தால் அதிர்ச்சி அடைவார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் உள்ளிட்டவை பொதுவுடைமை சிந்தாந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட கட்சிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close