[X] Close

மோடியை 'டாடி' என சொன்னதில் என்ன தவறு? இந்திரா காந்தியை 'அன்னை' என்றுதானே அழைக்கிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 17:07 pm
  • அ+ அ-

நிறுவன பணியாளரிடம் தகாத முறையில் நடந்ததற்காக பதவி விலகிய கூகுள் நிறுவன உயர் அதிகாரிக்கு 4.5 கோடி டாலர் (சுமார் ரூ.315 கோடி) தொகை வழங்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடுதல் பொறி பிரி வின் துணைத் தலைவராக பதவி வகித்தவர் அமித் சிங்கால். இவர் 2016-ம் ஆண்டு இப்பதவியில் இருந்து விலகினார். இவர் நிறு வனத்தில் இருந்து வெளியேறு வதற்காக வழங்கப்பட்ட தொகையை கூகுள் இதுவரை தெரி விக்கவில்லை. ஆனால் பங்குதாரர் வழக்கு தொடரவே, இத்தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறு வனமான ஆல்ஃபபெட் மீது ஒரு பங்குதாரர் வழக்கு தொடர்ந்திருந் தார். அதில் நிறுவனத்தின் உயர் பதவி வகிப்பவர் தவறுதலாக நடந் ததற்கு அவரை பதவியில் இருந்து வெளியேற்றாமல் அவருக்கு வெளி யில் தெரிவிக்க முடியாத அளவுக் கான தொகையை அளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். பாலியல் குற்றச்சாட்டு பிரச்சினையை கூகுள் நிறுவனம் எப்படி கையாள்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அமித் சிங்காலுக்கு 2 ஆண்டு களுக்கு தலா 1.5 கோடி டாலரும் 3-ம் ஆண்டில் 50 லட்சம் டாலரிலிருந்து 1.5 கோடி டாலர் வரை இழப்பீடு வழங்கப்பட்ட தாகக் கூறப்பட்டது. கூகுள் நிறு வனத்தில் இருந்து வெளியேறிய ஓராண்டுக்குப் பிறகு அவர் உபெர் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆனால் பாலியல் விவகாரம் வெளியா னதைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியில் இருந்தும் விலகினார்.

நிறுவனத்தில் பணியில் இருக் கும்போது தன்னிடம் தகாத முறை யில் அமித் சிங்கால் நடந்து கொண் டதாக ஒரு பெண் பணியாளர் குற் றம் சாட்டியிருந்தார். இது குறித்து நிறுவன ரீதியாக விசாரணை நடத் தப்பட்டதில், சம்பவம் நிகழ்ந்த தினத் தன்று, அமித் சிங்கால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்த அமித் சிங்கால், ஐஐடி ரூர்கி மாணவராவார். மின்னசோட்டா டுலுத் பல்கலை யில் எம்எஸ் பட்டம் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டு கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close