[X] Close

மின் விநியோக நிறுவனங்கள் பணம் தராததால் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் மின் உற்பத்தி நிறுவனங்கள்


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:30 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம் குண்டூரில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

மகளிருக்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி செயல்படுத்தி வருகிறது.

‘தீபம்’ திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு, கிராமங்கள்தோறும் கழிப்பறை, பெண்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களுக்கு மானிய விலை, அங்கன்வாடியில் பணியாற்றும் பெண்களுக்கு மாதம் ரூ. 10,500 ஊதியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் முன்னேற்றம் மிகவும் அவசியம். அவர்களின் கல்வியறிவு, நாட்டுக்கே வெளிச்சம் தரக்கூடியதாகும். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வழி வகுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு எனது வீட்டு பெண்களே சிறந்த உதாரணமாகும். 27 ஆண்டுகளுக்கு முன் பால் நிறுவனத்தை தொடங்கிய எனது மனைவி புவனேஸ்வரி, தற்போது இந்த தொழிலில் முன்னேற்றம் அடைந்து பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close