[X] Close

மல்லையாவுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணமில்லை: அமலாக்கத் துறை தகவல்


mallya-does-not-want-to-repay-the-loan

தொழிலதிபர் விஜய் மல்லையா : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:13 am
  • அ+ அ-

விஜய் மல்லையாவுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கி திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பி ஓடினார் விஜய் மல்லையா.

அதன் பின்னர் அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்தது. லண்டன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியா அனுப்ப தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

விஜய் மல்லையாவின் சொத்துக்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அமலாக்கத்துறை செய்துவந்த விசாரணையில் விஜய் மல்லையாவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. விஜய் மல்லையாவின் திவாலான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து, அந்நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்கு உதவி செய்ய முன்வந்தது அமலாக்கத்துறை. ஆனால், இந்த நிலையிலும் தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த நினைக்காமல், யுனைட்டெட் புரூவரிஸ் ஹோல்டிங்ஸ் கணக்கிலிருந்து, போலி கம்பெனிகளுக்கு பாதுகாப்பற்ற கடன்களை வழங்கியுள்ளார்.

இப்படியாக வழங்கப்பட்ட கடன்கள் மட்டுமே ரூ.3,516 கோடி எனத் தெரியவந்துள்ளது. இதில் வேவ் குழுமத்துக்கு ரூ. 188 கோடி, சஹாரா குழும நிறுவனத்துக்கு ரூ.200 கோடி கடனாகக் கொடுக்கப்பட்டதும் அடங்கும். மேலும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனின் பெரும்பகுதி வெளிநாட்டில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் ரூ. 3,200 கோடி வெளிநாடுகளில் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது. இந்தக் கடன்கள், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகள் வழங்கியவை.

மேலும், அவற்றை செயல்பாட்டு செலவுகளாகவும், குத்தகை வாடகையாகவும் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால், அவர்கள் காட்டியிருக்கும் கணக்கு போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குத்தகை வாடகை தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டும் எந்த பதிலும் இல்லை. விசாரணையில் இத்தகைய விவரங்கள் தெரியவந்துள்ளதால், விஜய் மல்லையாவுக்குக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற எண்ணமே இருப்பதாகத் தெரியவில்லை என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close