[X] Close

விரைவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை திட்டம்: மத்திய அமைச்சர் பர்ஷோதம் ருபாலா தகவல்


special-offer-for-farmers-soon

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 11:27 am
  • அ+ அ-

விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய வேளாண்துறை இணையமைச்சர் பர்ஷோதம் ருபாலா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு சலுகை திட்டம் எதிர்வரும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறுமா அல்லது அதற்கு முன்பாகவே மத்திய அரசு அறிவிக்குமா என்பதை அவர் உறுதிபட தெரிவிக்கவில்லை. அதேபோல விவசாயத் துறை எதிர்நோக்கும் சலுகைகள் குறித்து நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிய விவரத்தையும் அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

இருந்தபோதிலும் இந்த சலுகைக்காக விவசாயிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி யிருக்காது என்று கூறினார்.

பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்திய விவசாயிகளுக்கு அதற்கான வட்டியை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இவ் விதம் அறிவித்தால் அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பயிர் காப்பீட்டுக்கான முழு காப்பீட்டு தொகையையும் அரசே ஏற்பது குறித்தும் பரி சீலிக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.

தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை நேரடியாக விவசாயி களுக்கு அளித்ததைப் போல அளிக்கலாமா என்பது குறித்தும் அரசு ஆராய்ந்து வருகிறது.

ராபி பயிர் சாகுபடி பரப் பளவை அதிகரிப்பது மற்றும் குறுவை சாகுபடி பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் விவசாயி களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதுகுறித்தும் அரசு ஆராய்ந்து வருவதாக ருபாலா கூறி னார். பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் முதல் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோடைக்காலத்தில் பயிரிடப்படும் குறுவை சாகுபடி பரப்பளவை 45 லட்சம் ஹெக்டேராக உயர்த்த அரசு முயற்சித்து வருகிறது. இதில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளதாக வேளாண் துறை செயலர் சஞ்சய் அகர்வால் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close