[X] Close

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதை நம்ப வேண்டாம்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அறிவுறுத்தல்


infosys-narayanamorrthy

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 07:23 am
  • அ+ அ-

வளர்ந்து வரும் செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏஐ) எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று கூறுவதை யாரும் நம்பத் தேவையில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி தெளிவு பட அறிவுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் மேலும் பல வேலை வாய்ப்புகள்தான் உருவாகும். இத னால் வேலை வாய்ப்புகள் குறையும் என்பதை யாரும் நம்பத் தேவை யில்லை, அதுகுறித்து பயப்படவும் தேவையில்லை என்றார்.

கம்ப்யூட்டர் அறிவியல் பாடப் பிரிவில் செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் முக்கியான பாடமாகும். செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பிக் டேட்டா அனாலிடிக்ஸ், ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் உள்ளிட்ட நுட்பங்கள் அனைத்துமே மக்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்த உதவுவதோடு மேலும் சவுகர்யமாக வாழ்வதற்கு வழி வகுக்கும் என்றார்.

இத்தகைய தொழில்நுட்பங் களை முன்னரே செயல்படுத்திய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒற்றை இலக்க அள வுக்குக் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

உலக பொருளாதார கூட்ட மைப்பு (டபிள்யூஇஎப்) அறிக்கை யின்படி அபரிமிதமான இயந்திர வளர்ச்சி மற்றும் அல்கோரிதம் ஆகியவற்றால் வேலை வாய்ப்பு 13.30 கோடி பேருக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் பொருளாதார வர லாற்றை ஆராயும்போது கடந்த 50 ஆண்டுகளில் கம்ப்யூட்டர் வரவால் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. இத்தகைய தொழில்நுட்பங் களை இருகரம் நீட்டி வரவேற்ற நாடுகளில் வேலையில்லாத் திண் டாட்டம் மிகவும் குறைவாக உள்ளது என்றார்.

புதிய தொழில்நுட்பங்கள் மனி தனின் வேலை வாய்ப்பைப் பறித்து விடும் என்ற வாதத்தை புறந் தள்ளிய மூர்த்தி, அது முற்றிலும் உண்மையல்ல. புதிய தொழில் நுட்பங்கள் மனிதன் பழைய சவால்களை புதியநுட்பத்தின் உதவியோடு மேம்பட்ட சேவை களை மேற்கொள்ள உதவும் என்றார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உதாரணம் வங்கிகளின் தானி யங்கி பணப்பட்டுவாடா மையங்கள் தான் (ஏடிஎம்) என்றார். வங்கிக் காசாளருடன் போராட வேண்டிய நிலையை புதிய தொழில்நுட்பம் முழுமையாக மாற்றிவிட்டது. அத்துடன் உங்களுக்கு வசதியான நேரத்தில் அருகில் உள்ள மையங் களில் அவசரத் தேவைக்குக் கூட வங்கி அலுவல் அல்லாத சமயங் களிலும் பணம் எடுக்க முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏற் பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா வில் பங்கேற்ற அவர், புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் மேலும் மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்பதில் தனக்கு உடன்பாடு கிடையாது என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close