[X] Close

பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் தேவை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தகவல்


reforms-in-the-administration-of-public-sector-banks-are-needed

சக்தி காந்ததாஸ்- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 10:57 am
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளின் நிர் வாகத்தில் சீர்திருத்தங்கள் தேவை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

சமீபகாலங்களில் வாராக்கடன் களின் வளர்ச்சி குறைந்து வருகிறது. வங்கிகள் வாராக்கடன்களை மீட் கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன. ஆனாலும் பொதுத்துறை வங்கி களின் செயல்பாடுகள் திருப்திகர மாக இல்லாததால், அவற்றின் நிர் வாகத்தில் சில சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளன என்று அவர் ரிசர்வ் வங்கியின் அரையாண்டு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, பல காலமாக பெரும் வாராக்கடன் அழுத்தத்தில் வங்கித் துறை இருந்துவந்தது. தற்போது வாராக்கடன் சொத்துகளின் வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்த ஆண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வாராக்கடன் விகிதம் குறைந்துள்ளது. மார்ச் 2018-ல் 11.5 சதவீதமாக இருந்த வாராக்கடன், 2018 செப்டம்பரில் 10.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் மார்ச் 2018-ல் 15.2 சதவீதமாக இருந்தது. இது செப்டம்பர் 2018-ல் 14.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் காணப்படாத ஒரு நிகழ்வு இது.

மேலும், வாராக்கடனுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதமும் உயர்ந்துள் ளது. இது வங்கிகள் வாராக்கடன் அழுத்தத்தை தாங்கும் சக்தியைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது. தற் போதுள்ள வாராக்கடன் அளவு அதிகம்தான் என்றாலும், ரிசர்வ் வங்கி நடத்திய அழுத்த சோதனை யின்படி பார்க்கும்போது, வாராக் கடன் மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

வாராக்கடன் அளவைக் குறைக்க, கடன் சொத்துகளின் தரத்தை மறு ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை வாராக்கடன் அதிக மாக வைத்துள்ள வங்கிகளின் நிர்வாகத்தையும், செயல்பாடு களையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் மோசமாக உள்ள வங்கிகளுக்கு மறு மூலதனம் செய்யப்படுவதன் மூலம் ஆதரவு வழங்கப்பட முடிவுசெய்யப்பட்டது. எனவேதான் அரசு இந்த நிதிஆண்டுக்கான மறுமூலதன அளவை ரூ. 41 ஆயிரம் கூடுதலாக உயர்த்தியது.

20 பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த வங்கி கள் வழங்கும் கடன்களில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடுகளால் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உரசல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை மிகவும் கறாராகப் பின்பற்ற வேண் டும், சந்தை அபாயங்களை மிகுந்த கவனத்துடன் கணக்கில் கொள்ள வேண்டும். முந்தைய திவால் நடைமுறைகளைக் காட்டிலும், திவால் சட்டத்தின் நடைமுறைகள் வாராக்கடன்களை மீட்பதற்கான வலுவான நடைமுறைகளைக் கொண்டுள்ளன. கடன் வழங்குவதில் பெரும் முட்டுக் கட்டையாக விளங்கும் வாராக் கடன்களுக்கு முழுமையாகத் தீர்வு காண கால அவகாசம் தேவை.

வங்கி சாரா நிதி நிறுவனங் களும் தங்களின் கடன் வழங்குதல் விதிமுறைகளில் ரிஸ்க் எடுக்கும் போது மிக மிக கவனமாகச் செயல் பட வேண்டும். மேலும் அதிகபட்ச மான கடன் வளர்ச்சியை சமநிலைக் குக் கொண்டுவர வேண்டும். அதிக மான கடன் வளர்ச்சி ஆபத்தானது.

பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அனைத்துமே, பொறுப்புடனும், கவனமாகவும் இருப்பதோடு, சிறப்பான ரிஸ்க் மேலாண்மை நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close