[X] Close

சென்னையில் தயாராகும் ஐபோன்கள்: அடுத்த ஆண்டில் தொடக்கம்


iphone-sales

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 20:07 pm
  • அ+ அ-

அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், வெவ்வேறு விதமான  ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளன. 

இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஃபாக்ஸ்கான் ஆலை, பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களைத் தயாரித்து வந்தது. இந்நிலையில் தற்போது முக்கிய சந்தையான ஐபோன் தயாரிப்பிலும் கால் பதிக்கிறது. இதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கெனவே இதற்கென தனித் தயாரிப்பு ஆலையை உருவாக்கி வருகிறது.

சுமார் 15,000 பேர் பணிபுரியும் ஃபாக்ஸ்கானில் 90% பேர் பெண்கள் ஆவர். இத்துடன் ஐபோன் தயாரிப்பை ஆரம்பிக்கும்போது இன்னும் அதிக ஆட்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close