[X] Close

ரிசர்வ் வங்கியின் இருப்பு இல்லாமலேயே இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை


reserve-bank

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:43 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கியின் இருப்பைப் பெறாமலேயே இந்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை இலக்கை எட்டுவோம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்ற சர்ச்சைப் பரவலாக விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் தொடர்ந்து இதுகுறித்து கருத்துகளை வெளியிட்டுவருகிறார். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனும் இந்த விஷயத்தில் பல்வேறு விமர்சனங்களைச் சமீபத்தில் வெளியிட்ட தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பொது வெளியிலும் அவற்றை பேசி வருகிறார்.

பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசு எண்ணுவதாகவும், தனியார் பங்களிப்பை அதிகப்படுத்துவதோடு, வங்கிகளுக்கு மூலதனமாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரத் தன்மையில் தலையிடுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 31உடன் முடியும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை இலக்கை, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு இல்லாமலேயே எட்ட முடியும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

“ரிசர்வ் வங்கியின் இருப்பில் ஒரு பகுதி பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாகக் கொடுக்கவும், ஏழை மக்களின் நலவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படும். மாறாக, அரசு அதை எடுத்து அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசு சிறப்பாக நிதிநிலையை நிர்வகித்து வருகிறது. இந்த நிதி ஆண்டிலும் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் கொண்டுவருவோம். நிதிநிலை பற்றாக்குறையைச் சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தேவைப்படாது” என்று கூறினார்.

பெரும்பாலான மத்திய வங்கிகள் அவற்றின் மொத்த நிர்வகிப்பு சொத்துகளில் 8 சதவீதத்தை கையிருப்பாக வைத்துள்ளன. சில பழமைவாத வங்கிகள் 13-14 சதவீதம் வரை வைத்துள்ளன. 2013ல் மாலேகம் குழு ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ. 1.13 லட்சம் கோடியை அரசுக்குக் கொடுக்குமாறு கூறியது. அதுவரை ரிசர்வ் வங்கியின் கையிருப்பை பற்றி யாரும் பேசியதே இல்லை. தற்போது ரிசர்வ் வங்கியிடம் 28 சதவீதம் கையிருப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ரிசர்வ் வங்கிக்குத் தேவையான உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் அரசு வழங்காமல் இருந்தால்தான் அரசு தன் கடமையில் தோல்வியுற்றதாகிவிடும். இதற்காக ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை அரசு குறைக்கப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றார்.

அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்குமான உறவு சுமுகமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த இரண்டு நிதிக்கொள்கை கூட்டங்களும் சுமுகமாகவே நடந்தது. அதில் பல்வேறு விவகாரங்களை விவாதித்தோம். சில விவகாரங்களில் முடிவுகள் எடுக்க வேண்டாமென உர்ஜித் படேல் அறிவுறுத்தினார். சில விஷயங்களை ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவுக்குள்ளேயே விவாதித்துக்கொண்டிருக்க முடியாது என்பதால், அவற்றை தனி நிபுணர் குழுவிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்தக் குழுவுக்கு தகுதியான நிபுணர்களைப் பெயர்களை விவாதித்துள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close