[X] Close
 

சிசுவின் பசிக்கு பாலூட்டியவாறே பல்கலை., பரீட்சை எழுதிய ஆப்கன் பெண்: வைரலாகும் போட்டோ


afghan-woman-nursing-baby-as-she-writes-university-exam-is-viral

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Mar, 2018 14:04 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகத் தேர்வு எழுத வந்த இளம் தாய் ஒருவர் தனது பச்சிளங் குழந்தையையும் தேர்வு அறைக்குக் கொண்டு வந்திருந்தார். அவர் பரீட்டை எழுதிக்கொண்டிருக்கும்போதே குழந்தை பசியில் அழ உடனே சேருக்கு பின்னால் சென்று குழந்தையை எடுத்து பாலூட்டினார். குழந்தைக்கு பாலூட்டியவாறே அவர் தொடர்ந்து பரீட்சை எழுதினார்.


ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் பெண் கல்வி பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி சில பெண்கள் துணிச்சலும் மேன்மேலும் உயர் படிப்புகளில் ஈடுபடுகின்றனர்.


அப்படித்தான் ஜஹான் டாப் என்ற அந்த இளம் பெண்ணும் துணிச்சலாக கல்வி பயின்றுவருகிறார். பல்கலைக்கழக தேர்வு எழுதுவதர்கு கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்த அந்த தாய், குழந்தைக்கு பாலூட்டியவாறே பரீட்சை எழுதிய ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்வு அறையில் இருந்த விரிவுரையாளர் ஒருவர் ஜஹான் டாபின் புகைப்படத்தை எடுத்து அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close