[X] Close

தாய்க் கரடியும் விடா முயற்சி குட்டி கரடியும்!- வைரல் வீடியோவின் பின்னணி என்ன?


the-ugly-truth-behind-the-viral-video-of-a-baby-bear-struggling-to-reach-his-mum-on-a-clifftop

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Nov, 2018 15:37 pm
  • அ+ அ-

பனிமலையில் கஷ்டப்பட்டு ஏறும் குட்டிக்கரடி கீழே விழுந்து மீண்டும் முயற்சித்து உயரம் தொடும் வைரல் வீடியோ குறித்த உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளது அல்ஜசீரா.

கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.  பனிமலையில் ஏறிய தாய்க்கரடியை பின்பற்றி தானும் ஏறும் ஒரு குட்டிக் கரடியின் விடா முயற்சியும் அடங்கிய வீடியோ காட்சிதான் அது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்ட்ரோம் ஹன்ட்லி (Storm Huntley) என்ற தொலைக்காட்சி தொகுப்பாளர், இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களில், 10 மில்லியன் பேர் அதைப் பார்த்து ரசித்துள்ளனர். 

ஆனால், பிரபல ஊடகமான அல் ஜசீரா (ஆங்கிலம்) அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை தற்போது வெளியிட்டுள்ளது. பனிமலையில் கஷ்டப்பட்ட ஏறும் குட்டிக் கரடியை தாய்க்கரடிதான் கீழே தள்ளிவிடுகிறது என அல் ஜசீரா கூறுகிறது.
ரஷ்யாவில் பனிமலையில் இருக்கும் உயிரினங்களை ஆராய்ச்சி செய்வதற்காக செலுத்தப்படும் ட்ரோன்களால் உயிரினங்கள் துன்பப்படுவதாக அல் ஜசீரா கூறுகிறது.

அப்படி ஒரு ட்ரோன் நெருக்கமாக பறந்து வரவே குட்டியை ஏதோ ஆபத்து நெருங்குவதாக நினைத்து அந்த தாய்க் கரடி அதனை கீழே தள்ளிவிடுகிறது. எனவே, இனியாவது உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் ட்ரோன் கேமராக்களை பொறுப்புணர்வோடு பயன்படுத்த வேண்டும் என்றும் அல்ஜசீரா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த உண்மையை விளக்கும் செய்திக்கு அல் ஜசீரா தி அக்லி ட்ரூத் எனப் பெயரிட்டுள்ளது. உண்மை கசப்பானதாகத்தானே இருக்கும்!

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close