[X] Close

சிறிசேனாவுக்கு எதிராக கொழும்பில் பேரணி


protest-against-sirisena

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 11:10 am
  • அ+ அ-

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு எதிராக கொழும்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இலங்கையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் தற்காலிகமாக முடக்கினார். இதை ஏற்க மறுத்த ரணில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சவால் விடுத்தார்.

சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவா அல்லது ரணிலா என்பது தெரியவரும்.

நாடாளுமன்றம் கலைக்கப்படாதுமொத்தம் 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. இப்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதனை அதிபர் சிறிசேனாவும் பிரதமர் ராஜபக்சவும் மறுத்துள்ளனர். ‘‘நாடாளுமன்றம் கலைக்கப்படாது, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்’’ என்று இருவரும் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தனர்.

மஹிந்த ராஜபக்ச கூறியபோது, ‘‘எங்கள் அணிக்கு 113 உறுப் பினர்களின் ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன்’’ என்று தெரிவித்தார்.

சிறிசேனா - சம்பந்தன் சந்திப்பு15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் எம்.பி.க்களை இழுக்க ராஜபக்ச தரப்பு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் எம்.பி.க்கள் அதிபர் சிறிசேனாவை நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது நடு நிலை வகிக்குமாறு அதிபர் சிறிசேனா வலியுறுத்தியதாகவும் அதனை கூட் டமைப்பு ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரணில் ஆதரவாளர்கள் பேரணிஇந்தப் பின்னணியில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக ரணிலின் ஆதரவாளர்கள் கொழும்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட பேரணி சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. அலரி மாளிகை வழியாக பேரணி சென்ற போது ரணில் வெளியே வந்து கையசைத்தார். அப்போது பேரணியில் பங்கேற்றோர் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக கோஷமிட்டனர். வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பதற்றமான சூழ்நிலை உருவானது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close